நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அதிமுகவுடன் பாஜக இன்று மாலை பேச்சுவார்த்தை

  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக, அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்…

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக, அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்கள், வேட்பாளர்கள், பிரச்சார வியூகம், பணப்பட்டுவாடாவைத் தடுப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அண்மைச் செய்தி: சூழல் வரும்போது தேசிய ஆட்சியை கொண்டு வர முயல்வோம் – கே.எஸ்.அழகிரி

இக்கூட்டத்தில் அதிமுக உடன், மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும், வாக்குப்பதிவு முடிவுகள் வெளியான பின்னரே மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கான இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிமுகவுடன் இடப்பங்கீடு குறித்து பாஜக இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடப்பங்கீட்டில் பாஜக கேட்கும் இடங்களை அதிமுக ஒதுக்காத நிலையில், தனித்து போட்டியிடலாமா? என்பது குறித்தும் மாவட்ட தலைவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.