செந்தில் பாலாஜி வேண்டுமானால் என் மீது வழக்கு போடட்டும்- அண்ணாமலை

இந்தியாவிலேயே பணத்தை வேலை வாங்கித் தருவதற்காக பெற்றுக் கொண்டேன் என்று கூறிய ஒரே அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நியூஸ் 7 தமிழுக்கு பாஜக…

இந்தியாவிலேயே பணத்தை வேலை வாங்கித் தருவதற்காக பெற்றுக் கொண்டேன் என்று கூறிய ஒரே அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, நியூஸ் 7 தமிழுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், மத்திய அரசு சொல்லி தான் விலையை ஏற்றினோம் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மத்திய அரசு மக்களிடம் விலையை ஏற்றி வாங்குங்கள் என்று எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை.மத்திய அரசு அனுப்பிய கடிதம் எங்கு என்று கேட்டேன். ஆனால் அதற்கு செந்தில் பாலாஜியிடம் தற்போது வரை பதில் இல்லை. மத்திய அரசு சொல்லி இருப்பது TANGEDCO போல் மின் உற்பத்தி நிறுவனங்களை நஷ்டமான இடத்தில் வைத்திருக்கிறீர்கள் என்றும், அதிலிருந்து வெளியே வருவதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மட்டுமே மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அப்படி நடவடிக்கை எடுத்தால் 35 ஆயிரம் கோடி மானியம் தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர், ட்ரான்ஸ்மிசன் லாஸ் ஆகிய இரண்டையும் சரி செய்யச் சொல்லி உள்ளனர். மின் துறை சார்ந்து வழிவகைகளை மட்டுமே மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களிடம் பணத்தை ஏற்றி வாங்குங்கள் என்று எங்குமே தெரிவிக்கவில்லை. Indian energy exchange இல் 10 ரூபாய்க்கு வாங்குகீறீர்கள், கேட்டால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 இடத்தில் shud down செய்துள்ளதாகக் கூறுகின்றனர்.

செயற்கை மின்தடையை ஏற்படுத்தி உங்களுக்கு லாபம் வருவதற்காக என்ன வேண்டும் என்றாலும் நீங்கள் செய்து வருகிறீர்கள். Tangedco 15 ஆண்டுகள் ஒரு நிறுவனத்திடம் கான்ட்ராக்ட் போட்டு உள்ளார்கள். இதையெல்லாம் கையில் எடுத்தால் செந்தில் பாலாஜியால் அவரது இருக்கையில் அமரவே முடியாது. இந்த அநியாயம் எல்லாம் உலகில் எங்கும் இல்லை. தமிழக மகக்ளுக்குத் தெளிவாக தெரிகிறது. வரியை ஏற்றிவிட்டு பலியை மத்திய அரசின் மீது போடுகிறார்கள். விலையை உயர்த்துகிறீர்கள் என்றால் நீங்கள் தைரியமாக மக்களிடம் சொல்லி உயர்த்துங்கள். ஆனால் அதற்கு உங்களுக்குத் திராணி இல்லை.

செந்தில் பாலாஜி மீது பல வழக்கு உள்ளது. இந்தியாவிலேயே யாருமே ஒப்புகொள்ளாத வாக்கு. வேலை வாங்கித் தருவதாகக் கூறி செந்தில் பாலாஜி பணத்தை பெற்றுக் கொண்டதாகவும், பின்னர் அதை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் அவரே கூறியுள்ளார். தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. தமிழக முதல்வர் கரூரில் என்ன சொன்னார்? 6 ஆண்டுக்கு முன்னர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் போல் ஊழல் செய்பவர்கள் இல்லை என்று முதல்வரே கூறினார். ஆறு வருடத்திற்கு முன்னால் செய்த தவறுக்கு மேற்கு வங்கத்தில் ஒரு முன்னாள் அமைச்சரை நேற்று கைது செய்தனார்.அதேபோல் செந்தில் பாலாஜி மட்டும் அல்ல தமிழகத்தில் உள்ள பல அமைச்சர்கள் கண்டிப்பாக மாட்டுவார்கள். 4% கமிஷன் தெளிவாக உள்ளது. எல்லாம் எலக்ட்ரானிக் டாக்குமெண்ட்.கண்டிபாக ஆதாரங்களை அழிக்க முடியாது. செந்தில் பாலாஜி வேண்டும் என்றால் என் மீது மானநஷ்ட வழக்கு போடுங்கள். ஆனால், அதற்கு basic மானம் இருக்க வேண்டும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.