மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றும் பாஜக..? – 205 இடங்களில் முன்னிலை…!

மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 205 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தமிழ் நாட்டை போன்றே மேற்கு வங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திருணாமூல் காங்கிரஸ் அரசு எதிர்கட்சியாக பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுக்கும் என்று என்று தெரிகிறது. மொத்தம் 294 தொகுதிகள் உள்ள மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்க 148 இடங்கள் தேவை.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் 35 இடங்களில் வெற்றிபெற்றுள்ள பாஜக 170 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே நேரம் ஆளும் திருணாமூல் காங்கிரஸ் கட்சி, 12 இடங்களில் வெற்றி பெற்று 62 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மற்றொரு கட்சியான ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மேலும் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

சுமார் 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் திருணாமூல காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை பாஜக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.