பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜகவின் மற்ற மூத்த தலைவர்களை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மோசமாக விமர்சித்ததாக பாரதீய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதல்வர் மமதா பானர்ஜிக்கு அடுத்தடுத்து பல பிரச்னைகள் வரத்தொடங்கியுள்ளது. முதலில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது ஆறு கிரிமினல் வழக்குகள் குறித்து அவர் தனது வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என தேர்தல் ஆணையத்தில் பாஜக புகாரளித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், மார்ச் 19ம் தேதி கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு எதிராக இழிவான கருத்துகளை மமதா பேசியதாக பாஜக இன்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் மோடி தலைமையிலான அரசு திறமையற்றது மற்றும் ஊழல் நிறைந்தது எனவும் பாஜக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள். பாஜக தலைவர்கள் ஒருபுறம் ஜெய்ஸ்ரீ ராம் பெயரை உச்சரிக்கின்றனர் மறுபுறம் குற்றச்சம்பவத்தில் ஈடுபடுகின்றனர் என மமதா தெரிவித்ததாக தேர்தல் ஆணையத்திற்கு பிஜேபி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.