உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் சமீபத்தில் ஜீன்ஸ் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவர் தெரிவித்துள்ள புதிய கருத்து ஒன்று மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உத்தரகண்ட் நைனிடால் மாவட்டத்தில் உலக வன தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அம்மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனா காலத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு யூனிட்டுக்கு 5 கிலோ ரேஷன் வழங்கப்பட்டது. கொரோனா நோய் தொற்றை இந்தியா சிறப்பாக கையாண்டு வருகிறது. ஆனால், 200 ஆண்டுகளாக நம்மை அடிமைபடுத்தி வைத்து உலகை ஆண்ட அமெரிக்கா, தற்போதைய கொரோனாவில் இருந்து விடுபட முடியாமல் போராடி வருகிறது” என தெரிவித்தார்.
இந்தியாவை ஆண்டது பிரிட்டன் என்பற்கு பதிலாக அமெரிக்கா என அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.







