பாஜக பேரணி; 5000 பேர் மீது வழக்குப்பதிவு

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி பேரணி நடத்திய, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 5000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும்…

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி பேரணி நடத்திய, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 5000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டையை நோக்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு முன்பாக பேசிய அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முதல் எதிரி ஆர்.எஸ் பாரதி தான் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சொன்னதை ஏன் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், சொன்னதை செய்யாததால் தான் இந்த போராட்டம் என தெரிவித்த அண்ணாமலை, முழு பூசணிக்காயை சோற்றில் முதலமைச்சர் மறைப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘சிறுமியை காதலிக்கும்படி வற்புறுத்திய 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு – மதுரை உய்நீதிமன்ற கிளை’

தொடர்ந்து அண்ணாமலை தலைமையில் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இருந்து கோட்டையை நோக்கி நேற்று பேரணியாக செல்ல முயன்றனர். அதனைத்தொடர்ந்து, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், சட்டவிரோதமாக கூட்டத்தை கூட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை, ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் உட்பட 5000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.