இன்று தமிழகத்திற்கு வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று தமிழகத்திற்கு வருகிறார். இன்று இரவு விமானம் மூலம் மதுரை வரும் அவர், வேலம்மாள் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மதுரை…

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று தமிழகத்திற்கு வருகிறார்.

இன்று இரவு விமானம் மூலம் மதுரை வரும் அவர், வேலம்மாள் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வார் எனவும், பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திடவுள்ளார்.

மதியம் 2.45 மணிக்கு பாஜகவில் புதிதாக சேருபவர்களை வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்கிறார். இரவு 7.30 மணிக்கு பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், இரவு 10 மணி வரை கட்சி நிர்வாகிகளுடன் உரையாடி மீண்டும் வேலம்மாள் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை புதுச்சேரிக்கு தனி விமானத்தில் சென்று பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

பின்னர் நன்பகல் ஏஎப்டி திடலில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றவுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply