முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைதி சீர்குலைவுக்கு தூபம் போடும் பாஜக தலைவர் – முரசொலி கட்டுரையில் குற்றச்சாட்டு

தமிழக பா.ஜ.க. தலைவர் அமைதி சீர்குலைவுக்கு தூபம் போடும் முயற்சிகளில் ஈடுபடுகிறார் என்று திமுக நாளேடான முரசொலி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திமுக நாளேடான முரசொலி கட்டுரையில் கூறியுள்ளதாவது,  விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பாக, தமிழகக் காவல் துறை விழிப்புணர்வோடு, போதிய பாதுகாப்பு வழங்கி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.  கோவையில் இருவரும், சேலத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. மாவட்டம் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில், ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது; உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். கண்டன ஊர்வலத்தை நடத்தும்’ என்றெல்லாம் தமிழக பா.ஜ.க. தலைவர் அறிவித்து, அமைதி சீர்குலைவுக்கு தூபம் போடும் முயற்சிகளில் ஈடுபடுவது, போன்ற பா.ஜ.க. தலைவரின் செயல்பாடுகளைக் காணும் பொழுது பொதுமக்களிடையே இந்த ஐயம் உருவாவது இயற்கை தானே.

வலைதளங்களில் வலம்வரும் செய்திகள் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினர் எந்தவிதச் செயல்களிலும் இறங்கிடத் தயங்காதவர்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

இதை எல்லாம்கூடக் காவல் துறை தனது கவனத்தில் கொண்டு, உண்மைக் குற்றவாளிகளை – அமைதிக்கு ஊறு விளைவிக்க எண்ணும் பேர்வழிகளை சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத் தந்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாசாவின் காலண்டரில் இடம்பெற்ற தமிழ்நாட்டு மாணவியின் ஓவியம்

G SaravanaKumar

பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது

Jeba Arul Robinson

ஸ்ரீவில்லிபுத்தூரில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

Halley Karthik