அதிமுகவை வீழ்த்த பாஜக முயற்சிக்கிறது – கொ.ம.தே.க ஈஸ்வரன்

அதிமுகவை அழிக்கும் முயற்சியில் தமழ்நாடு பாஜக ஈடுபட்டு வருவதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில்…

அதிமுகவை அழிக்கும் முயற்சியில் தமழ்நாடு பாஜக ஈடுபட்டு வருவதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல்லில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவைஉறுப்பினர் ராஜேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈஸ்வரன், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் வேண்டும் என்றே காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் பாஜக களம் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.