அதிமுக விவகாரத்தில் பாஜகவிற்கு சம்பந்தமில்லை- வி.பி.துரைசாமி

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜகவிற்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை என பாஜக மாநில துணை தலைவர் விபி துரைசாமி தெரிவித்துள்ளார்.  தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜகவிற்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை என பாஜக மாநில துணை தலைவர் விபி துரைசாமி தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மீதும், முதல்வர் குடும்பத்தினர் மீதும், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சுப்பிரமணியன், நாசர் என பல அமைச்சர்கள் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சொல்லி வருகிறார்.

இந்த குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் இதுவரை மறுக்கவில்லை. பாஜக அண்ணாமலை கூறுகின்ற அத்தனை ஊழல் குற்றச்சாட்டுகளும், உண்மை எங்களுக்கு புலனாகிறது. இதில் மாற்றுக்கருத்து இருந்தால் திமுக கட்சியோ, ஆட்சியோ நீதிமன்றத்திற்கு போகட்டும். நாங்கள் நிரூபித்து காண்பிக்கின்றோம்.

ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகின்றது. நீதிமன்றத்தை அவமத்திக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி மக்களை தூண்டி விட்டு போராட்டம் நடத்தி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க போவதாக கூறுகின்றார். இது பொதுமக்கள் பிரச்சினை இல்லை, ஊழல் குற்றச்சாட்டு என்பதால் நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டும்.

போராட்டம் என்பது பொதுமக்கள் பிரச்சினையாக இருக்கவேண்டும். தனிப்பட்ட நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. இது மக்கள் போராட்டம் இல்லை. காங்கிரசார் போராட்டம் நடத்துவது சட்டத்திற்கு, நீதிக்கு, தர்மத்திற்கு, மக்களுக்கு எதிரானது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் என்பது அதிமுக உட்கட்சி விவகாரம். பொதுக்குழுவினை கூட்டித்தான் முடிவு எடுக்க வேண்டும். அதிமுகவை உட்கட்சி விவகாரத்தில் பாஜகவிற்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை. இதுகுறித்து கருத்து கூறவும் விருப்பமில்லை. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக முழுக்க முழுக்க அவர்களே பேசி முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும். இது அவர்களுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.