முக்கியச் செய்திகள் இந்தியா

தெலங்கானாவில் ரயிலுக்கு தீ வைப்பு: ஒருவர் பலி; 10க்கும் அதிகமானோர் காயம்

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

தெலங்கானாவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. அப்போது, ரயில்வே போலீஸார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எனினும், போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரயில்வே தண்டவாளங்களில் கொட்டிக் கிடந்த கற்களை எடுத்து வீசி எறிந்தனர். ரயிலுக்குத் தீ வைத்தனர். ரயில் நிலையத்தில் இருந்த கடைகள் மற்றும் பொருட்களை சூறையாடினர்.

இதையடுத்து, ரயில்வே போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில்,  போராட்டக்காரர்களில் ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கற்களை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 2 காவலர்களும் காயமடைந்தனர்.

ரயில்வே காவல் துறை டிஜியான சந்தீப் சாண்டில்யா மற்றும் பிற உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கண்காணித்தனர். ரயில் நிலையத்தில் இருந்த கடைகளையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.

வன்முறையில் ஈடுபட வேண்டாம்: ரயில்வே அமைச்சர் வலியுறுத்தல்

இளைஞர்கள் பொது சொத்துகளை சேதப்படுத்தக் கூடாது; போராட்டங்களில் வன்முறை கூடாது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அவன் – இவன் பட வழக்கு: இயக்குனர் பாலா விடுவிப்பு

EZHILARASAN D

நடிகர் ரஜினியுடன் கமல், லோகேஷ் சந்திப்பு

G SaravanaKumar

மீனவர்கள் உயிரிழப்பு: உள் துறைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு!

Jeba Arul Robinson