ஹெச்.ராஜா தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பாஜக – மேலாண்மை குழு விவரங்கள் வெளியீடு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக மாநில தேர்தல் மேலாண்மை குழு விவரங்ளை அக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …

நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக மாநில தேர்தல் மேலாண்மை குழு விவரங்ளை அக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.  கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் பாஜகவும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளது. மாவட்டம் வாரியாக பாஜக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு வரும் நிலையில்,  இன்று சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில தலைமை தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.

https://twitter.com/BJP4TamilNadu/status/1754383098404536669

இதையடுத்து,  நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக மாநில தேர்தல் மேலாண்மை குழு தொடர்பான விவரங்ளை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.  தேர்தல் மேலாண்மை குழு எம்.சக்கரவர்த்தி,  கே.எஸ்.நரேந்திரன், நாராயணன் திருப்பதி,  எம்.நாச்சியப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தல் அலுவலக குழுவில் அமர் பிரசாத் ரெட்டி,  மாலா செல்வகுமார்,  காயத்ரி ஸ்ரீனிவாஸ் ஆகியோரும்,  அலுவலக மேலாண்மை குழுவில் எம்.சந்திரன்,  பிரமிளா சம்பத் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

ஊடக குழுவில் ரங்கநாயகுலு (எ) ஸ்ரீரங்கா,  எஸ்.என்.பாலாஜி,  எம்.ஜெயகுரு, செளமியா ராணி பிரதீப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : ஸ்பெயினில் சூரிய உதயத்தை ரசித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவில் முன்னாள் எம்.பி.-க்கள் கே.பி.ராமலிங்கம்,  எஸ்.கே.கார்வேந்தன்,  பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  இதேபோல் தேர்தல் பணிகளுக்கான மொத்தம் 38 குழுக்களை பாஜக மாநில தலைமை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.