குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பாஜக செயல்படவில்லை: மாநில தலைவர் அண்ணாமலை

அரியலூர் மாணவி விவகாரத்தில் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பாஜக செயல்படவில்லை என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரியலூரைச் சேர்ந்த பள்ளி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை…

அரியலூர் மாணவி விவகாரத்தில் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பாஜக செயல்படவில்லை என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அரியலூரைச் சேர்ந்த பள்ளி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கட்டாய மதமாற்றம் புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. ஆனால், இது வெறும் வதந்தி என்றும், பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அரியலூரில் உள்ள வடுகப்பாளையத்திற்கு சென்ற பாஜக நிர்வாகிகள், மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது மாணவியின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார்.

https://twitter.com/news7tamil/status/1487715157371285508

இந்த நிகழ்வில் வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும் என தெரிவித்தார். குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பாஜக போராடவில்லை எனவும் மனித தவறுக்கே நியாயம் கேட்பதாகவும் அவர் கூறினார்.

அண்மைச் செய்தி: எம்.பி நவநீதகிருஷ்ணன் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களிடம் விளக்கம்

இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் திருக்காட்டுப்பள்ளி கிறிஸ்தவப் பள்ளியில் ஆசிரியர்களால் மதப் பிரசாரம் செய்யப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறையின் விசாரணை அறிக்கை ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.