முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக மாவட்ட தலைவர் கைது!

கொளத்தூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதாக பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலனை கைது செய்தனர். கடந்த ஆக. 1-ம் தேதி கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட…

கொளத்தூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதாக பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலனை கைது செய்தனர்.

கடந்த ஆக. 1-ம் தேதி கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூரில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி கபிலன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் :நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை… மதுரையில் பட்டாசுக்கடை வைக்க போறீங்களா? உடனே அப்ளை பண்ணுங்க!

இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பெரவள்ளூர் போலீசார், இன்று (ஆக. 4) காலையில், வியாசர்பாடியில் உள்ள கபிலனின் வீட்டில் வைத்து அவரை கைது செய்தனர். கபிலன் கைது சம்பவத்தையறிந்த பாஜகவினர் அப்பகுதியில் கூடினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியது. இதனிடையே, கபிலன் கைதுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.