பாஜக-வுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்: தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி மாற்றம்…

பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தும், தமிழக மேலிட பார்வையாளர் பொறுப்பில் இருந்தும் சி.டி.ரவி மாற்றப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் ஏற்கனவே சூடி பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த…

பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தும், தமிழக மேலிட பார்வையாளர் பொறுப்பில் இருந்தும் சி.டி.ரவி மாற்றப்பட்டுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் ஏற்கனவே சூடி பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், மூன்றாவது முறையாக வென்று ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது.

அந்த வகையில் பாஜக தனது கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது. அதில், முக்கிய பல நிர்வாகிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். ஆளும் கட்சியான பாஜகவில் 13 துணைத்தலைவர்கள், 9 பொதுச்செயலாளர்கள், 13 செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார். மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி பொதுச் செயலாளர்களாக இருந்த கர்நாடகாவை சேர்ந்த சிடி ரவி, அசாமை சேர்ந்த திலீப் சைகியா, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த வினோத் சோன்கர் உள்ளிட்டோர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி உள்ளிட்டோர் தேசிய செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.