மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் உள்ள முனியாண்டி
சுவாமி கோவில் நடைபெற்ற திருவிழாவில் 150 ஆடுகள், 500க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டு பிரியாணி படைக்கப்பட்டது.
தமிழகம் மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் பெரும்பாலான பகுதிகளில் முனியாண்டி விலாஸ் என்ற பொதுவான பெயரில் பல உணவகங்களை நாம் பார்க்க இயலும். முனியாண்டி சுவாமி கோவிலை மனதில் கொண்டே முனியாண்டி விலாஸ் உணவகங்கள் தொடங்கப்படுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ஆண்டுதோறும், தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் திருக்கோயிலில் முனியாண்டி விலாஸ் பெயரில் உணவகம் நடத்தி வருபவர்கள் ஒன்றிணைந்து சாமிக்குத் திருவிழா எடுப்பது வழக்கம்.
88வது ஆண்டாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் உள்ள ஸ்ரமுனியாண்டி கோவிலில் நடைபெறும் இந்த திருவிழாவில், பூஜை பொருட்களான பழங்கள், மலர் உள்ளிட்டவற்றைத் தலைச் சுமையாக ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவிலில் விடிய விடியப் பூஜை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாகக் கொடுத்த 2500 கிலோ அரிசி மற்றும் 150 ஆடுகள், 500க்கும் மேற்பட்ட சேவல்கள் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட சமையல்
கலைஞர்களை வைத்து பிரியாணி சமைத்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது.
வடக்கப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரசாதமாக வழங்கப்பட்ட பிரியாணியை வாங்கி சென்றனர். இவ்விழா காரணமாக, இரண்டு நாட்களாக வடக்கம்பட்டி கிராமம் கமகம பிரியாணி வாசனையில் திளைத்துக் கொண்டிருக்கிறது.