திடீரென தீப்பற்றிய கார்; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தாய், குழந்தை

புதுச்சேரியில் திடீர் என கார் தீ பிடித்து எரிந்ததில் காரில் இருந்த தாய் மற்றும் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். புதுச்சேரி நைனார்மண்டபம் பகுதி சுதானா நகரில் மணிகண்டன் என்பவர் அவரது மனைவி சுகன்யா…

புதுச்சேரியில் திடீர் என கார் தீ பிடித்து எரிந்ததில் காரில் இருந்த தாய் மற்றும் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

புதுச்சேரி நைனார்மண்டபம் பகுதி சுதானா நகரில் மணிகண்டன் என்பவர் அவரது மனைவி சுகன்யா மற்றும் குழந்தை உடன் வசித்து வருகிறார். சென்னையில் பணிபுரிந்து வரும் அவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் புதுச்சேரி பெரியார் நகரில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு சென்று, காரை நிறுத்தி விட்டு அவர் மட்டும் உள்ளே சென்றுள்ளார். அப்போது அவர் காரின் ஏ.சி வழியாக திடிர் என புகை வெளியேறியுள்ளது. இதை கண்ட அவரின் மனைவி உடனடியாக கூச்சலிட்டுள்ளார். அவரது அலரல் சத்தம் கேட்ட மணிகண்டன் கார் நோக்கி விரைந்து வந்து பார்த்தபோது காரின் முன் பக்கம் தீயினால் ஏரிய ஆரம்பித்தது. துரிதமாக செயல்பட்ட அவர் தனது மனைவி மற்றும் குழந்தையை காரை விட்டு வெளியேற்றினார். அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply