ஐபிஎல் ஃபைனலில் தோனி விளையாட தடையா..? – காரணம் என்ன..?

தோனி விளையாட தடை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம். ஐபிஎல் 2023 தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் கடந்த மே 23 முதல் துவங்கிய…

தோனி விளையாட தடை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஐபிஎல் 2023 தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் கடந்த மே 23 முதல் துவங்கிய
நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடித்திருந்த குஜராத்
டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்
முதல் குவாலிபயர் போட்டியில் விளையாடின.

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு செய்த குஜராத் அணி சென்னை சூப்பர்
கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 172 ரன்கள் எடுத்தது. .

குஜராத் டைட்டன்ஸ் சார்பில் முகமது சமி மற்றும் மோஹித் சர்மா ஆகியோர் தலா 2
விக்கெட்டுகளை வீழ்த்தினர். 173 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத்
டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157
ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 10
ஆவது முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இந்த போட்டியின் போது சென்னை அணியின் கேப்டனான தோனி நடுவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

சென்னை – குஜராத் அணியின் ஆட்டத்தின் போது போட்டியின் நடுவே பந்து வீச்சாளர் பத்திரனா மைதானத்தை விட்டு சில நிமிடங்கள் வெளியேறியுள்ளார். போட்டியின் விதியின்படி மைதானத்திலிருந்து போட்டியாளர் வெளியேறினால் 9 நிமிடங்களுக்கு பின்னரே பந்து வீச அனுமதிக்கப்படுவர்.

ஆனால் பத்திரனா மீண்டும் மைதனாத்திற்கு திரும்பிய 4வது நிமிடத்தில் அணியின் சார்பில் பந்து வீச்சு அனுமதிக்கப்பட்டார். நடுவர்கள் தலையிட்டு இன்னும் 5 நிமிடங்கள் உள்ள நிலையில் பந்து வீச அனுமதிக்க நடுவர்கள் மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே தோனி நடுவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிசிசிஐ யின் விதியின்படி நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அடுத்த போட்டியின் விளையாட மறுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.