முக்கியச் செய்திகள் தமிழகம்

கோலாகலத்துடன் தொடங்கியது பிக்பாஸ் சீசன் -5

நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று பிக்பாஸ் சிசன் 5 தொடங்கியுள்ளது.

மற்ற சீசன்களை போலவே இதையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதில் பாடகி இசைவாணி, நடிகை ஷகிலாவின் மகள் மிலா, விஜய் டிவி பிரபலம் பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் நமீதா மாரிமுத்து உள்ளிட்ட இரண்டு திருநங்கைகளும் இதில் பங்கேற்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது பங்கேற்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இணையத்தில் ஒரு பெயர் பட்டியல் வைரலாகி வருகிறது.

விஜே பிரியங்கா (விஜய் டிவி தொகுப்பாளர்), அபிஷேக் ராஜா (Youtuber, தொகுப்பாளர்), பாவனி ரெட்டி (சீரியல் நடிகை), சின்னப்பொண்ணு (பாடகி), நாடியா சேங் (மலேசிய மாடல்), சிபி சந்திரன் (நடிகர்), பிரதாயினி சர்வா (நடிகை), நமீதா மாரிமுத்து (திருநங்கை, மாடல்), மிலா, (நடிகை ஷகீலாவின் மகள்), சந்தோஷ் பிரதாப் (நடிகர்), சுனிதா கோகோய் (குக் வித் கோமாளி பிரபலம்), கோபிநாத் ரவி (மாடல்), அக்ஷரா ரெட்டி (மாடல், நடிகை), அபினய் வட்டி (நடிகர்), ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்), இசைவாணி (பாடகி) மதுமிதா ரகுநாதன் என பட்டியல் நீண்டுள்ளது.

ஆனால் இவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சீசன் தொடங்கியுள்ள நிலையில் உறுதி செய்யப்பட்ட பங்கேற்பாளர்கள் யார் என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மேகதாது அணைக்கு இன்றே பூமி பூஜை நடத்த வேண்டும்; கர்நாடகா காங்கிரஸ்

Saravana Kumar

அசுர வளர்ச்சியில் ஓடிடி தளங்கள்.. தியேட்டர்களுக்கு பாதிப்பா?

Gayathri Venkatesan

காவல் நிலையத்தில் காதல் ஜோடிக்கு கத்திக்குத்து

Ezhilarasan