முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

பெரிய நடிகர்கள் சினிமாவை காப்பாத்துவதில்லை – தயாரிப்பாளர் கே.ராஜன்

சிறிய பட தயாரிப்பாளர்கள் தான் சினிமாவை காப்பாத்துகிறார்கள் என்றும், பெரிய நடிகர்கள் சினிமாவை காப்பாத்துவதில்லை என்றும் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

 

Not reachable திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படகுழு மற்றும் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், சினிமாவை காப்பாத்துவது சிறிய பட தயாரிப்பாளர்கள் தான். பெரிய பெரிய நடிகர்கள் இந்த சினிமாவை காப்பாத்தவில்லை. அவர்கள் தங்களை முன்னேற்றி கொள்கின்றனர் என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

பெரிய பட்ஜெட் படங்களின் கதாநாயகர்கள் இங்குள்ள தொழிலாளிகளை வாழ வைக்கவில்லை. ஹைதராபாத்தில் உள்ள தொழிலாளர்களை தான் வாழ வைக்கின்றனர். படப்பிடிப்புக்கு ஒழுங்காக நடிகர்கள் வருவதில்லை. ஏசி அறையில் உட்காந்து கொண்டு சரியாக வருவதில்லை. வடமாநில நடிகைகள் இங்கு நடிக்க வரும் போது அவர்களுக்கு உதவி செய்ய 7 பேர் வைத்து கொள்கின்றனர். தயாரிப்பாளர் கதி என்ன ஆவது. இதில் பவுன்சர்கள் வேறு. இயக்குனர்கள் கூட பவுன்சர்கள் வைத்து கொள்கின்றனர் என கூறினார்.

 

தயாரிப்பாளர்களுக்கு தான் இங்கு பாதுகாப்பு இல்லை. அவர்களின் பணத்திற்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் தான் பவுன்சர்கள் வைத்து கொள்ள வேண்டும். ஒரு படத்தை வெளியிடுவது தான் கடினம். படம் எடுப்பது கடினம் இல்லை. நல்ல படங்களை பார்க்க மக்கள் தயாராக உள்ளனர். 5 கோடி வாங்கிய நடிகர்களின் படத்தை விட 5 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகர்களின் படத்தை மக்கள் பார்க்கின்றனர்.

 

மைனா படத்தை வெளியிட முடியாமல் படகுழு கஷ்டப்பட்டது. பிறகு படத்தை பார்க்க உதயநிதியை அழைத்தனர். அப்போது ரெட் ஜெயன்ட் பெரிய அளவில் வளரவில்லை. 10 சதவீதம் தான் ரெட் ஜெயன்ட் எடுத்து கொள்கின்றனர். சரியாக கணக்கு காட்டுகின்றனர். உதயநிதி தான் மைனா படத்தை வெளியிட்டார் அது மிகப்பெரிய வெற்றி அடைந்தது. கதை தான் முக்கியம் கதாநாயகன் கிடையாது என்ற கே.ராஜன், சிக்கனமாக செலவு செய்யுங்கள் என தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அயோத்தியில் புதிய மசூதிக்கான மாதிரி புகைப்படம் வெளியீடு!

Jayapriya

எப்படி இருக்கிறார் ‘டாக்டர்’? – விமர்சனம்

G SaravanaKumar

கிறிஸ்துமஸ்: முதலமைச்சரை நேரில் சந்தித்து அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து

Arivazhagan Chinnasamy