சிறந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள்: முதன்முறையாக இடம்பிடித்த சென்னை பல்கலை.,

உலகளாவிய தரவரிசையில் சிறந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில், சென்னைப் பல்கலைக்கழகம் முதன்முறையாக இணைந்துள்ளது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள உயர்க் கல்வி நிறுவனங்களின் செயல்திறன், ஆராய்ச்சி, மாணவர்-ஆசிரியர் உறவு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு…

உலகளாவிய தரவரிசையில் சிறந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில், சென்னைப் பல்கலைக்கழகம் முதன்முறையாக இணைந்துள்ளது.

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள உயர்க் கல்வி நிறுவனங்களின் செயல்திறன்,
ஆராய்ச்சி, மாணவர்-ஆசிரியர் உறவு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு
தரவரிசைப் பட்டியலை QS நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டுக்கான QS தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் உலகின் தலை சிறந்த 50 ஆராய்ச்சி உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியலில், நூற்றாண்டு பாரம்பரியமிக்க சென்னைப் பல்கலைக்கழகம் முதன்முறையாக இணைந்து 48-வது இடத்தைப் பிடித்துள்ளது.

47-வது இடத்தில் ஐ.ஐ.டி. ரூர்கியும், 37-வது இடத்தில் ஐ.ஐ.டி., கவுஹாத்தியும்
உள்ளன. உலகின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் பெங்களூருவில் உள்ள IISC 155-வது இடத்துக்கு முன்னேறியுள்ள்து. மும்பை ஐ.ஐ.டி. 172-வது இடத்தை பிடித்துள்ளது. ஒட்டுமொத்த தரவரிசையில் டெல்லி பல்கலைக்கழகம், ஜே.என்.யூ., ஜாமியா மில்லியா,
ஐ.ஐ.டி., புவனேஸ்வர், ஜாதவ்பூர் பல்கலை., உள்ளிட்டவை கடந்த ஆண்டை விட இந்த
முறை பின்தங்கியுள்ளன.

இதையும் படியுங்கள்: கோவை விமான நிலையத்தில் அறிமுகமாகும் ரோபோ!!!

QS பட்டியலில் இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் பின்னடைவைச் சந்தித்திருப்பது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.