சென்னையில் போராட்டம்: செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு

சென்னையில் போராட்டம் நடத்தியதற்காகவும், காவல் ஆய்வாளருக்கு காயம் ஏற்படுத்தியதற்காகவும்  செவிலியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட மெட்ரோ ரயில் அருகேயும், ஓமந்தூரார்…

சென்னையில் போராட்டம் நடத்தியதற்காகவும், காவல் ஆய்வாளருக்கு காயம் ஏற்படுத்தியதற்காகவும்  செவிலியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட மெட்ரோ ரயில் அருகேயும், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை முன்பும் 400க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் அறிவுறுத்தலை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டக்காரர்களை கைது செய்ய போலீசார் முயன்றனர்.

அப்போது, செவிலியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, செவிலியர்களைக் கைது செய்து போலீசார் சமூக நலக் கூடத்தில் அடைத்தனர். இதற்கிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஜாம்பஜார் பெண் ஆய்வாளர் ராஜியின் தலையில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபட்டதாக 487 செவிலியர்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன் அனுமதியின்றி கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல, காவல் ஆய்வாளரின் தலையில் காயம் ஏற்படுத்தியது தொடர்பாக மேலும் ஒரு வழக்குப் பதிவும் திருவல்லிக்கேணி போலீசார் செவிலியர்கள் மீது பதிவு செய்துள்ளனர். அடையாளம் காட்டக்கூடிய நபர்கள் மீது மிரட்டல், காயம் ஏற்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.