ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டிக்கு சிறந்த ஊராட்சிக்கான விருது!

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை சிறப்பாக  செயல்படுத்தியதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி ஊராட்சிக்குச் சிறந்த ஊராட்சிக்கான விருதை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வரக்கூடிய திட்டப்பணிகளான…

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை சிறப்பாக  செயல்படுத்தியதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி ஊராட்சிக்குச் சிறந்த ஊராட்சிக்கான விருதை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வரக்கூடிய திட்டப்பணிகளான சாலை, வாறுகால், பண்ணை குட்டம் அமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல் ஆகிய பணிகளைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோட்டைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமாருக்கு டெல்லியில் மத்திய அமைச்சர்கள் எல்.முருகன் மற்றும் வி.கே சிங் ஆகியோர் சிறந்த ஊராட்சிக்கான விருதை வழங்கினர்.

—சௌம்யா.மோ

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.