முக்கியச் செய்திகள் இந்தியா

ஆங்கிலத்தில் அசத்தும் குப்பைப் பொறுக்கும் பெண்.. வியக்கும் நெட்டிசன்ஸ்!

தோற்றத்தை வைத்து யாரையும் குறைவாக எடை போட்டுவிடக்கூடாது என்பதற்கு இந்தக் குப்பைப் பொறுக்கும் பெண்ணும் உதாரணம்.

பெங்களூரில் குப்பைப் பொறுக்கிப் பிழைப்பு நடத்தும் பெண், செசிலா மார்க்கரெட் லாரன்ஸ். அந்த நகரின் பல்வேறு பகுதிகளில் இந்தப் பெண்ணை பார்த்திருக்க முடியும். இவரிடம் பேசிய சச்சினா ஹெக்கர் (Shachina Heggar)என்பவர், அந்த வீடியோவை தனது இன்ஸ்டா கிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில், நம்மைச் சுற்றி நிறைய கதைகள் உலாவுகின்றன. செய்ய வேண்டியதெல்லாம் நின்று நிதானித்து கவனிக்க வேண்டியதுதான். அழகான அல்லது வலி மிகுந்த கதைகளை நாம் கேட்க முடியும் என்று கூறியிருக்கிறார் அவர்.

அந்த வீடியோவில் அந்தக் குப்பை பொறுக்கும் பெண், ஆங்கிலத்தில் ஸ்டைலாக பேசுகிறார். முதல் வீடியோவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அன்னை மேரி பற்றிய பாடலைப் பாடுகிறார். மற்றொரு வீடியோவில், தான் ஜப்பானில் ஏழு வருடம் இருந்ததாகத் தெரிவிக் கிறார்.

’நீங்கள் தனியாக இருப்பதாக உணர்கிறீர்களா?’ என்று சச்சினா கேட்க, அன்னை மேரி புகைப் படத்தைக் காட்டி, தான் எப்போதும் அப்படி நினைக்கவில்லை என்றும் என்னுடன் கடவுள் இருக்கிறார் என்றும் நம்பிக்கையாகக் கூறுகிறார்.

இவர் பேசும் ஆங்கிலம் நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது. ‘இதை பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். யாரையும் தயவு செய்து குறைவாக எடை போடாதீர்கள்’என்று பலர் தெரிவித் துள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Shachina Heggar (@itmeshachinaheggar)

Advertisement:
SHARE

Related posts

அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா ஷோபாவுக்கு எதிராக நடிகர் விஜய் வழக்கு

Ezhilarasan

புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

Saravana Kumar

ஆங்கிலேயர் ஆட்சியை மிரளவைத்த மாவீரன்

Ezhilarasan