கோபிசெட்டிபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் முடிவில் சிலைகளை கரைக்க சென்ற இடத்தில், 10 குழந்தைகள் உட்பட 30 பேருக்கு தேனீ கொட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தங்கமலை கரடு பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்பொதுமக்கள் ஒன்று கூடி விநாயகர் சிலைகளை கோயிலில் வைத்து வழிபாடு செய்து 3-ம் நாள் முடிவில் சிலைகளை வேட்டைக்காரன் புதூர் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்காலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். இந்த ஊர்வலத்தில் தங்கமலை கரடு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் கலந்துகொண்டு வாகனத்தில் சிலைகளை எடுத்துச்சென்று கீழ்பவானி வாய்காலில் கரைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி முடிந்த பின் பொதுக்கள்
அனைவரும் வீடுகளுக்கு செல்ல கீழ்பவானி வாய்காலின் கரையோரத்தில் வந்து
கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த தேன் கூடு ஒன்றிலிருந்து ஆயிரக்கணக்கான தேனீக்கள் திடீரென பறந்துவந்து அங்கு சென்றுகொண்டிருந்த ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட சிறுவர்களை அனைவரையும் கொட்ட துவங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து, தேனீக்களிடம் சிக்கிய அனைவரும் என்ன செய்வதறியாது துணிகளை போர்த்தியபடி கீழே படுத்துக்கொண்டனர்.ஆனாலும் தேனீக்கள் தொடர்ந்து அங்கிருந்த சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை கடுமையாக கொட்டியதில் வலி தாங்க முடியாத அனைவரும் கூச்சலிட்டு அழுது புரண்டனர். பின்னர், சுமார் அரைமணி நேர போராட்டத்திற்கு பின், தேனீக்களிடம் சிக்கிக்கொண்ட அனைவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர் உள்ளிட்ட 30-க்கும்
மேற்பட்டவர்களுக்கு கோபி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில்
உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதில் 20-க்கும் மேற்பட்டவர்கள்
தேனீக்கள் கொட்டிய பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டு நலமுடன் வீடு திரும்பிய
நிலையில் 5-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரூபி.காமராஜ்