ஆந்திராவில், மினி லாரி கவிழ்ந்து சாலையில் சிதறிய பீர் பாட்டில்களை, மதுப்பிரியர்கள் போட்டிபோட்டு அள்ளிச் சென்றனர்.
ஆந்திர மாநிலம் அனக்காப் பள்ளியில் இருந்து, பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று நரசிப்பட்டணத்திற்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் லாரியில் இருந்த 200 பெட்டி பீர் பாட்டில்கள் சாலையில் சிதறின. சில பாட்டில்கள் உடைந்து சாலையில் பீர் ஆறாக ஓடியது. இதனைப் பார்த்த மதுப்பிரியர்கள், முண்டியடித்துக்கொண்டு பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.
இதையும் படியுங்கள் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை யாருக்கு?? இந்தியா – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!!
இது பற்றிய தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பீர் பாட்டில்களை அள்ளி செல்ல முயன்ற சில பொதுமக்களை கட்டுப்படுத்தி, அவர்களிடம் இருந்து பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் சாலையில் கவிழ்ந்த மினி லாரியை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







