இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று தொடங்குகிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர், இன்று முதல் வரும் 11 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. புள்ளிப் பட்டியலின் தரவரிசைப்படி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், இரண்டாவது இடத்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தட்டிச் சென்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த முறை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக செயல்பட்டு வரும் அதே நேரத்தில், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் அதே தீவிரத்துடன் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : அரபிக் கடலில் உருவானது ’பைப்போர்ஜாய்’ புயல்!!
லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த இறுதிப் போட்டியானது தொடங்குகிறது. இதில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.13 கோடியே 20 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டம் சமனில் முடிந்தாலோ, அல்லது ஆட்டம் தடைபட்டாலோ இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும்.