30 C
Chennai
May 19, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

பரபரப்பை ஏற்படுத்திய பீஸ்ட் திரைப்படம் பேனர்

பீஸ்ட் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் முதலமைச்சர் ரங்கசாமி – நடிகர் விஜய் சந்தித்த புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

சமீப காலமாக பீஸ்ட் படத்தில் அப்டேட்டுகள் இணையத்தை வலம்வருகின்றன. இந்த திரைப்படத்தின் தொடர் அப்டேட்டுகளால் நடிகர் விஜய் ரசிகர்கள் அனைவரும் திருவிழா போல் கொண்டாடியும், ஆங்காங்கே பேனர்கள் வைத்தும் வருகின்ரனர். இந்த திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் பேனர்கள் வைத்துள்ளனர். இந்த பேனர்களில், முதலமைச்சர் ரங்கசாமி படமும், நடிகர் விஜய்யின் படமும் இடம்பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் விஜய்யின் இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம், பேனர்களில் இடம்பெற்றுள்ளது. புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த பேனர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading