மார்ச் 18 ஆம் தேதி ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பத்து தல’. 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘மஃப்டி’ யின் ரீம்மேக் தான் இப்படம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் சிம்பு கேங்ஸ்டராகவும் கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.இந்த படத்தின் முதல் பாதி கன்னடத்தில் இப்படத்தை இயக்கிய நார்த்தனை வைத்தே எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்பு இடம்பெறும் இரண்டாம் பாதி முழுவதும் ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்குகிறார்.
பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமாகி வந்த இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று இப்படித்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து பத்து தல படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடல் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இம்மாதம் 3ஆம் தேதி வெளியாகியுள்ளது.
மேலும் நம்ம சத்தம் என தொடங்கும் இப்படலை இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பாடியுள்ளார். பாடல் ஆசிரியர் விவேக் வரிகளில் சாண்டி மாஸ்டர் நடன இயக்கத்தில் வெளியான இந்த லிரிக்கல் வீடியோ ரசிகரகளிடம் பெறும் வெரவேற்ப்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.