பசவராஜ் பொம்மை அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு திறமையான முதலமைச்சர் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற விமான கட்டுப்பாட்டு அமைப்பு கட்டடத் திறப்பு விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடகாவிற்கும் தனக்குமான உறவை பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியில் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அர்ப்பணிப்புடன் இயங்கும் ஒரு திறமையான முதலமைச்சர். கர்நாடகாவும், அதன் தலைநகரம் பெங்களூருவும் எனக்கும் மிகவும் நெருக்கமான இடம். கர்நாடக மாநிலம் ஆலமரம் போன்றது. பன்பாடு மற்றும் கலாச்சாரத்தின் வேரிலிருந்து வளர்ந்து கர்நாடகா மிகப்பெரும் உயரத்தில் வளர்ந்துவருவதுடன், தொழில்நுட்பத்திலும் வானைத் தொட்டு நிற்கிறது” என்று பேசினார்.
இதனை தொடர்ந்து பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “கர்நாடக மாநிலம் விரைவான முன்னேற்றத்துடன் வளர்ந்து வருகிறது. மேலும் உலகின் ஒரு முக்கிய இடத்தை கர்நாடக மாநிலம் தன்னுடைய தலைமையை கொண்டு மிக விரைவில் எட்டிப்பிடிக்கும்” என்று தெரிவித்தார்.







