காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரிடம் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடக மாநில புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை, இன்று காலை டெல்லி சென்றார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன் முறையாக அவர் டெல்லி சென்றுள்ளார். அவர் மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். பின்னர் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் 100 சதவிகிதம் உறுதியாக இருப்பதாகவும், அணை கட்ட கர்நாடகாவுக்கு உரிமை உண்டு எனவும் கர்நாடக உள்துறை அமைச்சராக பதவி வகித்தபோது பசவராஜ் பொம்மை தொடர்ந்து கூறி வந்த நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என அமைச்சரிடம் இப்போது வலியுறுத்தினார்.
பின்னர் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். ’கர்நாடக முதலமைச் சர் பசவராஜ் பொம்மையை சந்தித்தேன். அவருக்கும் அவருடைய குழுவுக்கும் வாழ்த்து களை தெரிவித்துள்ளேன்’ என்று மத்திய அமைச்சர் அமித் ஷா, ட்விட்டரில் தெரிவித்துள் ளார்.
பசவராஜ் பொம்மை இன்று மாலையில் பிரதமர் மோடியை அவர் சந்திக்க இருக்கிறார்.








