முக்கியச் செய்திகள் இந்தியா

பெகாசஸ் விவகாரம்; அடுத்த வாரம் விசாரணை

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது அடுத்த வாரத்தில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகள், பெகாசஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் தினமும் இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி பத்திரிகையாளர் என். ராம், அரசியல் கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மற்றும் ரிட் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பான வழக்கை அவசர வழக்கான விசாரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்குகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள்: அமைச்சர் தலைமையில் குழு!

Ezhilarasan

முதல்வர் பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்கிறார்: அமித் ஷா பாராட்டு!

Niruban Chakkaaravarthi

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சியினர்!

Halley Karthik