வெண்ணிலா கபடிக்குழு பட பாணியில் வாழப்பாடி அருகே நடைபெற்ற பரோட்டா சாப்பிடும் போட்டியில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தப்பூர் பகுதியில் புதிய உணவகம் திறப்பு விழா நடைபெற்றது. கடையை விளம்பரப்படுத்தும் நோக்கில் பரோட்டா சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. போட்டி விதிப்படி, 10 நிமிடத்துக்குள் 15 பரோட்டா சாப்பிடுபவரே வெற்றியாளர்.
அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் தோல்வி அடைந்தவர்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கு பணம் செலுத்த வேண்டும். வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்றுள்ள காட்சியை போன்று நிஜத்தில் நடந்த இந்த போட்டியில், இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.







