பொங்கல் திருவிழாவையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சென்னையில் இருந்து இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 16 ஆயிரத்து 221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்த நிலையில், இன்று தொடங்கி நாளை வரை சென்னை மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், பொங்கல் திருநாள் முடிந்த பிறகு, பணியிடங்களுக்கு மீண்டும் செல்வதற்கு வசதியாக பிற மாவட்டங்களில் இருந்து வருகிற 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 15 ஆயிரத்து 270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.