31.7 C
Chennai
September 23, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆன்லைன் ரம்மியில் பணமிழப்பு – உயிரை மாய்த்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன்(26). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, துர்கா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். பார்த்திபன் நீண்ட நாட்களாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். மேலும் இந்த விளையாட்டில் அதிகமாக பணத்தையும் இழந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் அவருக்கு கடன் தொல்லை அதிகரித்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் இவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிய பார்த்திபன், நேற்று முன்தினம் தனது மனைவி துர்காவை, அவரது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் அனுப்பி வைத்துள்ளார்.

இரவு வீட்டில் தனியாக இருந்த பார்த்திபன் தூக்குபோட்டு உயிரிழப்பு கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி போலீசார் பார்த்திபனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வு முடிந்த பின்னர் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மணலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மிக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், தொடர்ந்து இவ்விளையாட்டுக்களில் பணமிழக்கும் மக்கள், உயிரை மாய்த்துக் கொள்வது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

வீடியோ வெளியிட்டு உயிரிழப்பு செய்துகொண்ட நபர்!

Jeba Arul Robinson

பார்வை ஒரு குறையல்ல! மின்சாதன பொருட்களின் பழுது நீக்கி அசத்தும் பார்வை மாற்றுத்திறனாளி!

Web Editor

“பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்”:மமதா பானர்ஜி

Halley Karthik