வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு

வங்க தேசத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த வன்முறை தொடர்பான வழக்கில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் அசீனாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று வங்காளதேசம். அந்நாட்டில்  கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக எழுந்த பெரும் போராட்டத்தில் கலவரம் வெடித்தது.  இதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

தொடர் போராட்டங்கள் காரணமாக பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். தொடர்ந்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார்.

இதனிடையே வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனா மற்றும் அப்போதைய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதில், மனித குலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு மரண தண்டனை விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.