முக்கியச் செய்திகள் விளையாட்டு

210 ரன்கள் குவித்து இந்தியா அதிரடி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் இந்திய அணி 210 ரன்களை குவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கன் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஜோடியாக களமிறங்கி அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கினர்.

ராகுல் 48 பந்துகளில் 69 ரன்களையும், ரோஹித் சர்மா 47 பந்துகளில் 74 ரன்களையும் குவித்தனர். இதில் ராகுல் 2 சிக்ஸர்களையும், 6 பவுண்ட்ரிகளையும் விளாசினார். அதேபோல ரோஹித் 3 சிக்ஸர்களையும் 8 பவுண்ட்ரிகளையும் விளாசினர்.

இவர்களுக்கு அடுத்து களமிறங்கிய பண்ட் மற்றும் பாண்டியா ஜோடி, தலா 27, 35 ரன்களை குவித்தனர். 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 210 ரன்களை குவித்துள்ளது.

கடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியிருந்த நிலையில் இந்த போட்டியில் அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!

Halley karthi

தொலைப்பேசி ஒயர் மாடலில் புதியவகை நெக்லஸ்: வைரலாகும் புகைப்படம்!

Halley karthi

உயிருக்கு போராடும் நடிகர் பாபு – நேரில் சந்தித்து கண்கலங்கிய பாரதிராஜா

Jayapriya