மாமல்லபுரத்தில் வாழை இலை சாப்பாடு ருசியாக இருந்ததாக ஜெர்மன் செஸ் வீரர் ட்வீட் செய்துள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட்போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில், அங்குள்ள உணவகத்தில் அவர்கள் சாப்பாட்டைச் சாப்பிட விரும்பியுள்ளனர். இதையடுத்து, ஜெர்மன் செஸ் வீரர்கள் நேராக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்று அங்கு உணவு உட்கொண்டுள்ளனர்.
அண்மைச் செய்தி: ‘மேட்டூர் அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்!’
ரசம், சாம்பார், பொரியலுடன் தலை வாழை இலை சாப்பாடு கேட்டு வாங்கி சாப்பிட்ட அவர்கள், அந்த மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ஓட்டலில் நல்ல உணவு சாப்பிட்டதாக ஜெர்மன் நாட்டு செஸ் வீரர் கீர்ட்வான் டேர் வெல்டே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/blackatlantic/status/1553432124677451776








