டூம்ஸ்டே கடிகாரத்தில் 90 வினாடிகள் மட்டுமே பேலன்ஸ்; உலகம் அழிவை நெருங்கிவிட்டது -வல்லுநர்கள் எச்சரிக்கை

உலக அழிவை கணக்கிடும் டூம்ஸ்டே கடிகாரத்தில் இன்னும் 90 வினாடிகள் மட்டுமே மீதம் உள்ளன.  டூம்ஸ்டே கடிகாரம் உலக அழிவைக் கணிக்கும் ஒரு அணுக் கடிகாரம்.1947ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும்…

உலக அழிவை கணக்கிடும் டூம்ஸ்டே கடிகாரத்தில் இன்னும் 90 வினாடிகள் மட்டுமே மீதம் உள்ளன. 

டூம்ஸ்டே கடிகாரம் உலக அழிவைக் கணிக்கும் ஒரு அணுக் கடிகாரம்.1947ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்புச் சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் இந்த டூம்ஸ்டே கடிகாரம் உலக இறுதி நாளினை கணக்கிட்டுக் காட்ட உருவாக்கப்பட்டது.

இந்த கடிகாரத்தின் கணக்கின் படி நள்ளிரவு 12 மணியை இந்த கடிகாரம் தொட்டுவிட்டால் இந்த உலகம் அழிந்துவிடும் என்பது நம்பிக்கை. 2016ம் ஆண்டு இந்த கடிகாரம் 12 மணி ஆக 3 நிமிடத்தில் இருந்தது. இந்நிலையில் இந்த கடிகாரம், நள்ளிரவு முதல் 90 வினாடிகள் (Seconds) வரை நகர்ந்துள்ளது.

உலக நிகழ்வுகளையும் பருவநிலை மாற்றங்களையும் போர்களையும் அணு ஆயுதங்களையும் கூர்ந்து ஆராய்ந்து நமக்கு எச்சரிக்கை அளிக்கும் கடிகாரம் தற்போது எந்த முன்பு இருந்ததை விட நள்ளிரவிற்கு மிகவும் அறுகில் இருப்பது உலக அழிவிற்கு நாம் அருகில் சென்றிருப்பதைக் குறிக்கிறது.

குறிப்பாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான படையெடுப்பு, காலநிலை நெருக்கடி மற்றும் COVID-19 பரவல் போன்ற உயிரியல் அச்சுறுத்தல்கள் ஆகியவை இதற்குக் காரணமாக அமைகிறது.

இந்த கடிகாரத்தின் நிமிடங்கள் குறைந்து கொண்டே வருவது இந்த உலகிற்கு நல்லதல்ல. அனைத்து நாடுகளும் மக்களும் இதை உணர்ந்து மனித குளத்தின் நலனுக்காகவும் சுற்றுச்சூழல் நலனுக்காகவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இந்த டூம்ஸ்டே கடிகாரம் உணர்த்துவதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.