கேதார்நாத் கோயில் வளாகத்தில் வீடியோ எடுக்க நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
அண்மையில் கேதார்நாத் கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், கோயிலின் முன்பாக காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்திக் கொள்ளும், சினிமா பாணியிலான வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பூங்கா, மால் என்ற வரிசையில் பொழுதுபோக்கு இடங்களாக ஆன்மிக தலத்தை பாவிப்போருக்கு எதிராக கண்டனங்களும் சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவாயின.
குறிப்பாக யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் தங்கள் சுய விளம்பரத்துக்காகவும், வருமானத்துக்காகவும் இம்மாதிரியான நடவடிக்கைகளில் இறங்குவதாகவும், இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.
கேதார்நாத் கோயில் தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்கும் இந்த வீடியோ சென்றதில், இம்மாதிரியான சம்பவங்களை தடுக்குமாறு பத்ரிநாத் – கேதார்நாத் கோயில் கமிட்டி சார்பில் காவல்துறையில், புகார் அளிக்கப்பட்டது. மேலும், இந்த வகையிலான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்று, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கோயில் வளாகத்தில் ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோ பதிவுகளை எடுப்பதற்கு தடை விதித்தும் தற்போது கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.