புதுச்சேரியில் பாமக தனித்து போட்டியிட்டு 6 தொகுதிகளிலாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என நிர்வாகிகளை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுச்சேரி மாநில பாமக நிர்வாகிகள் கூட்டம் மொரட்டாண்டி பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், புதுச்சேரியில் பாமக தனியாக நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.
புதுச்சேரியில் தனித்து நின்று ஆட்சியைப் பிடிக்கவேண்டும் எனக் கூறிய ராமதாஸ், முதலில் 6 சட்டமன்ற உறுப்பினர்களை பெறும் வகையில் நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என்று கூறினார். வீடு வீடாகச் சென்றும் சமூக வலைதளங்கள் மூலமும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Advertisement: