#BALLON D’OR விருது பட்டியலில் இடம் பெறாத ரொனால்டோ, மெஸ்ஸி!

BALLON D’OR விருதுக்கான பரிந்துரை பட்டியலில், கால்பந்து உலகின் ஜாம்பவான்களான ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோர் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கால்பந்து உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் BALLON D’OR விருதுகள்…

#BallonDOr award list that did not include Ronaldo, Messi!

BALLON D’OR விருதுக்கான பரிந்துரை பட்டியலில், கால்பந்து உலகின் ஜாம்பவான்களான ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோர் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கால்பந்து உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் BALLON D’OR விருதுகள் வரும் அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில், கால்பந்து உலகின் ஜாம்பவான்களான ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோர் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

BALLON D’OR விருதுக்கு வினிசியஸ் ஜூனியர், ரோட்ரி, ஜூட் பெல்லிங்ஹாம், கைலியன் எம்பாப்பே, எர்லிங் ஹாலண்ட் மற்றும் ஹாரி கேன் ஆகியோர் பெயர்கள் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மிகவும் இளம் வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லாமின் யாமலும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்த விருதை மெஸ்ஸி 8 முறையும், ரொனால்டோ 6 முறையும் வென்றுள்ளனர். பிரான்ஸ் இதழால் உருவாக்கப்பட்ட BALLON D’OR விருதை முதன்முதலில் 1956 ம் ஆண்டு இங்கிலாந்து வீரரான ஸ்டான்லி மேத்யூஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.