“தளபதிக்கு அன்பை வெளிப்படுத்த வாய்ப்பளித்த படக்குழுவினருக்கு நன்றி” – இசையமைப்பாளர் #Yuvan நெகிழ்ச்சிப் பதிவு!

தளபதிக்கு அன்பை வெளிப்படுத்த வாய்ப்பளித்த படக்குழுவினருக்கு நன்றி என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (GOAT – Greatest…

vijay yuvan combo goat

தளபதிக்கு அன்பை வெளிப்படுத்த வாய்ப்பளித்த படக்குழுவினருக்கு நன்றி என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பதிவிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (GOAT – Greatest Of All Times). இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கோட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு, அதாவது காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் 1100 திரைகளில் காலை 9 மணிக்கு படம் திரையிடப்பட்டது. வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் மற்றும் பிற அண்டை மாநிலங்களிலும் காலை 4 மணி முதல் கோட் திரைப்படம் திரையிடப்பட்டது. வெளிநாடுகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 6000 திரைகளில் கோட் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியானது.தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பல பகுதிகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : Rainalert – உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

இந்நிலையில், 2003ஆம் ஆண்டு வெளியான ‘புதிய கீதை’ படம் தான் யுவன் இசையமைத்த ஒரே விஜய் படம். இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன. அதன் பிறகு விஜய் படத்துக்கு யுவன் இசையமைக்கவில்லை. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் – யுவன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது இருவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. கோட் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில் யுவனின் இசையை பலரும் பாராட்டி வருகிறார்கள். இது தொடர்பாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைதளபக்கதில் பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் கூறியதாவது:

“உங்களது அன்புக்கு நன்றி மக்களே. தளபதிக்கு எனது அன்பை வெளிப்படுத்த வாய்ப்பளித்த ஏஜிஎஸ் அகோரம் சார், அர்ச்சனா கல்பாத்திக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக இது எனது சகோதரர் வெங்கட் பிரபு இல்லாவிட்டால் நடந்திருக்காது”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.