கன்னியாகுமரியில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாட்டம்: சிறப்புத் தொழுகையில் 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை
நினைவுகூறும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நேற்று அரபா தினம் என்பதால் உலகில் உள்ள ஹாஜிகள் அனைவரும் மெக்கா சென்று அங்கு ஹஜ் கடமையை நிறைவு செய்ததை ஒட்டி இன்று கன்னியாகுமரி
மாவட்டம் நாகர்கோவில் இளங்கடையில் உள்ள மஸ்ஜித் அஸ்ரப் பள்ளிவாசலில்
இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகைகள் நடத்தினர்.

இதில் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் வகையில், இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் ஹஜ் பெருநாளையொட்டி இஸ்லாமியர்கள் இறைவனின் பெயரால் ஆடுகளை பலியிட்டு அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்கினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.