முக்கியச் செய்திகள் இந்தியா

திரிபுராவில் கைது செய்யப்பட்ட பெண் பத்திரிகையாளர்களுக்கு ஜாமீன்

திரிபுரா கலவரம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக, கைது செய்ய பெண் பத்திரிகையாளர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் கடந்த சில நாட்களுக்கு முன் துர்கா பூஜையின்போது வன்முறை வெடித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேஷின் அண்டை மாநிலங்களிலும் கலவரம் பரவியது. திரிபுராவிலும் இதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. எதிராக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கொடுத்த புகாரில் அடிப்படையில் இந்த எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் சிலரின் கடைகள், மசூதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வந்ததை அடுத்து, அங்கு கலவரத்தை உண்டானது. இதுகுறித்த புலனாய்வு செய்திகளை HW நியூஸ் என்ற நிறுவனத்தின் செய்தியாளர்கள் சம்ருதி சகுனியா, ஸ்வர்னா ஜா ஆகியோர் செய்தி வெளியிட்டுள்ளனர். இதுபற்றி விஷ்வ இந்து பரிஷத் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திரிபுராவில் இருந்து அசாம் மாநிலத்துக்கு செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கு தடுத்து நிறுத்தப்பட்டு திரிபுராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு போலீசார் அவர்களை கைது செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இந்திய எடிட்டர்ஸ் கில்ட் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில், திரிபுராவின் கோமதி மாவட்ட தலைமை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram