‘தலைவர் 170’ படத்தில் பாகுபலி வில்லன் – அசத்தல் அப்டேட்..!

ரஜினிகாந்தின் ’தலைவர் 170’ படத்தில் நடிகர் ராணா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் கெத்து…

ரஜினிகாந்தின் ’தலைவர் 170’ படத்தில் நடிகர் ராணா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் கெத்து காட்டிய இத்திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த்-க்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இத்திரைப்படம் குறித்த அப்டேட்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நிலையில், படக்குழு குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாக செப்டம்பர் 30-ம் தேதி லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அறிவித்தது. அதன்படி, அக்டோபர் 1-ம் தேதி, படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் த.செ.ஞானவேல், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

இதையும் படியுங்கள் : ‘தளபதி 68’ திரைப்படத்தில் இவர்களா? – வெளியான புதிய தகவல்..!

தொடர்ந்து அக்டோபர் 2-ம் தேதி, படத்தில் இடம்பெறும் நாயகிகள் குறித்த அறிவிப்பு வெளியானது. நடிகைகள் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் ஆகியோர் ‘தலைவர் 170’ இணைந்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தீணி போட்டு வரும் லைகா நிறுவனம் இன்றும் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டு வருகிறது.

https://twitter.com/LycaProductions/status/1709078361367351544

அந்த வகையில், நடிகர் ராணா இப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதாநாயகனாகவும், வில்லனாகவும் கலக்கிய ராணா இத்திரைப்படத்தில் என்ன மாதிரியான ரோலில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.