திருப்பத்தூரில் ஐயப்பன் கோயில் குடமுழுக்கு விழா!- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஐயப்பன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. திருப்பத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயம், ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் மகா குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்து,…

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஐயப்பன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

திருப்பத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயம், ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் மகா குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்து, கடந்த 23 ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டன. தொடர்ந்து, ஆறு கால பூஜைகள்
நிறைவுபெற்று, பூர்ணாவதி மற்றும் தீபாராதனைகள் நடந்தது.

தொடர்ந்து, யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகி மூலவர் விமானக் கலசத்திற்கான பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பிள்ளையார்பட்டி பிச்சை
குருக்கள் கும்பத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்து கும்பாபிஷேகத்தினை
நடத்தி வைத்தார். மேலும், பக்தர்கள் கும்பத்தில் தண்ணீர் ஊற்றும் பொழுது
‘சுவாமி சரணம் ஐயப்பா’ என்ற முழக்கங்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு
எழுப்பினர்.

இதனை தொடர்ந்து, கும்பத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், புனித நீரை கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மீது குழாய் மூலம் தெளித்தனர். விழாவில் கூட்டுறவுத்துறை  அமைச்சர் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் மற்றும் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.