களக்காடு அருகே குவியும் வெளிநாட்டுப் பறவைகள்!

களக்காடு அருகே வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள கீழக்கருவேலங்குளத்தில் உப்பிலாங்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள ஏராளமான விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.…

களக்காடு அருகே வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள கீழக்கருவேலங்குளத்தில் உப்பிலாங்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள ஏராளமான விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. களக்காடு உப்பாற்றில் இருந்து இந்த குளத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் களக்காடு பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இதேபோல், உப்பிலாங்குளத்திலும் தண்ணீர் வற்றியதால் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

இதனிடையே, உப்பிலாங்குளத்திற்கு தினசரி அதிகாலையில் வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கி, கடந்த சில நாட்களாக வெளிநாட்டு பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குளத்தில் தேங்கிக் கிடக்கும் நீரில் உள்ள மீன்களைச் சாப்பிடுவதற்காக வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். குளத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகளை, பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

—–சௌம்யா.மோ

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.