அயோத்தி ராமர் கோயிலில் கட்டடக் கலையை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம்!

இந்திய கோயில்களின் கட்டடக் கலை பாரம்பரியத்தை காட்சிப்படுத்தும் வகையில், உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி பூஜை  கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக்…

இந்திய கோயில்களின் கட்டடக் கலை பாரம்பரியத்தை காட்சிப்படுத்தும் வகையில், உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி பூஜை  கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் கோயில் 110 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இந்த கோயிலைக் கட்ட ரூ.1000 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது. 2.27 ஏக்கா் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலையை செய்வதற்கு தேவையான இரு அரியவகை கற்கள் நேபாளத்தில் இருந்து அயோத்திக்கு கொண்டுவரப்பட்டு, செதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அயோத்தியில் மூன்று மாடி ராமர் கோயிலின் தரை தளம் கட்டும் பணி டிசம்பர் இறுதிக்குள் நிறைவடையும் என்றும், குடமுழுக்கு விழா அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் என்றும் கோயில் கட்டுமானக் குழுத்தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய கோயில்களின் கட்டடக் கலை பாரம்பரியத்தை காட்சிப்படுத்தும் வகையில், உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் யோசனையின்பேரில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்காக 25 ஏக்கா் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: ”அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலின் கருவறையில் குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் மூத்த நிா்வாகிகள், பிரதமா் மோடியை அண்மையில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை காண்பது தனது பாக்கியம் என்று தெரிவித்தார்.

மேலும், அயோத்தி ராமர் கோயிலை தரிசிக்க வரும் பக்தர்கள், அந்த நகரில் சில நாள்கள் தங்கியிருந்து வேறு இடங்களையும் காணும் வகையிலான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அறக்கட்டளை நிா்வாகிகளுக்கு பிரதமர் மோடி யோசனை கூறினார். அந்த அடிப்படையில், அயோத்தி ராமர் கோயிலை தரிசிக்க வரும் பக்தர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

முக்கியமாக, இந்திய கோயில்களின் கட்டடக் கலை பாரம்பரியத்தை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 25 ஏக்கா் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இந்திய கோயில்களின் வளமான கட்டடக் கலை அம்சங்கள், இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறும். இதுதவிர, கடவுள் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘ராம சரித மானஸ் அனுபவ மையம்’, ராமர் சகாப்தத்தின் பல்வேறு அம்சங்களை சித்தரிக்கும் உலகத் தரத்திலான மெழுகு அருங்காட்சியகம், தாமரை வடிவிலான மாபெரும் பல்லூடக நீரூற்றுப் பூங்கா, அங்காடி என பக்தர்களை ஈர்க்கும் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.