தொடர்ந்து 7வது வாரம் பாக்ஸ் ஆபிஸில் அவதார் 2 திரைப்படம் முன்னிலை வகுத்து வருகிறது.
ஜேம்ஸ் கேமரூனின் திரைப்படமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ கடந்த வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இடையில் 3,600 வட அமெரிக்கத் திரையரங்குகளிலிருந்து $15.7 மில்லியனைச் வசூல் செய்துள்ளது. மேலும் தொடர்ந்து ஏழாவது வாரமாக பாக்ஸ் பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தில் நீடித்து அவர்ர்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
#AvatarTheWayOfWater has now held the top spot at the box office for 7 consecutive weekends! The last film to hold on to No.1 for this long was, you guessed it, the first #Avatar movie.https://t.co/q2Xl2sfSV6 pic.twitter.com/txZGjM5Muz
— Screen Rant (@screenrant) January 29, 2023
இதுவரை, ‘அவதார் 2′ அமேரிக்க பாக்ஸ் ஆபிஸில் மட்டும் 620 மில்லியன் டாலரையும், உலகளவில் 2.117 பில்லியன் டாலர்களையும் ஈட்டியுள்ளது.
இதுவரை நான்கு படங்கள் அதிக வசூல் செய்த சாதனை படைத்துள்ளது. ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ்’ 2.071 பில்லியினையும், ‘அவதார் ‘தி வே ஆஃப் வாட்டர்’, 2.92 பில்லியினையும், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ 2.7 பில்லியினையும் மற்றும் ‘டைட்டானிக்’ 2.19 பில்லியினை வசூலித்து உலகளவில் டிக்கெட் விற்பனையின் டாப் வரிசையில் உள்ளன.
டாப் பாக்ஸ் சாதனை படைத்த படங்களில் மூன்றை கேமரூன் இயக்கியுள்ளார். பெரிய படக்கள் ஏதும் இன்னும் வராத நிலையில் அவதார் ‘தி வே ஆஃப் வாட்டர் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.